முகப்பு
செய்திகள்

சிரஞ்சீவி படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா அறிவிப்பு: காரணம் என்ன?

சிரஞ்சீவி நடிக்கும் படத்திலிருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக விலகுவதாக நடிகை த்ரிஷா அறிவித்துள்ளார்.

Updated On : 14 மார்ச், 2020 at 2:06 PM
பகிர்:

சிரஞ்சீவி நடிக்கும் படத்திலிருந்து கருத்துவேறுபாடுகள் காரணமாக விலகுவதாக நடிகை த்ரிஷா அறிவித்துள்ளார்.

கொரட்டலா சிவா இயக்கும் ஆச்சார்யா படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார் சிரஞ்சீவி. கடந்த அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. 2006-ல் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஸ்டாலின் படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து நடித்தார் த்ரிஷா. அதன்பிறகு இப்போதுதான் மீண்டும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு வந்தது. இந்நிலையில் இப்படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா அறிவித்துள்ளார். 

ட்விட்டரில் அவர் கூறியதாவது:

Advertisement

முதலில் சொன்னதும் கலந்துரையாடியதும் சிலநேரங்களில் மாறிவிடுகின்றன. கருத்துவேறுபாடுகளால் சிரஞ்சீவி சாரின் படத்திலிருந்து விலகுகிறேன். படக்குழுவினருக்கு வாழ்த்துகள். என்னுடைய அன்பான தெலுங்கு ரசிகர்களே, ஒரு நல்ல படத்தில் மீண்டும் உங்களைச் சந்திக்கிறேன் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.