முகப்பு
செய்திகள்

மீண்டும் இணைந்த கெளதம் மேனன் - த்ரிஷா: புதிய விடியோ வெளியீடு!

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கெளதம் மேனன் - த்ரிஷா கூட்டணி குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Updated On : 2 மே, 2020 at 10:43 AM
பகிர்:

கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கெளதம் மேனன் - த்ரிஷா கூட்டணி குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகை த்ரிஷா ட்விட்டரில் இதுதொடர்பாக ஒரு விடியோ வெளியிட்டுள்ளார். நாங்கள் படமாக்கியுள்ளதை உங்களுக்குக் காண்பிக்க ஆவலாக உள்ளேன் என்று கூறியுள்ளார். எனினும் இருவரும் ஒரு படத்துக்காக இணைந்துள்ளார்களா அல்லது குறும்படம், மியூசிக் விடியோவுக்கான கூட்டணியா என்பது தெரியவில்லை. த்ரிஷாவின் ட்வீட்டிலிருந்து இதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெளதம் மேனன் - த்ரிஷா கூட்டணியில் விண்ணை தாண்டி வருவாயா, என்னை அறிந்தால் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.