செய்திகள்

வீட்டுப் பணிப்பெண்ணை ஒளிப்பதிவாளர் ஆக்கிய நடிகர் ஷாந்தனு

DIN

தன்னுடைய குறும்படத்தைப் படமாக்கியவர் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் நடிகர் ஷாந்தனு.

வீட்டில் எல்லா வேலைகளையும் செய்யும் பெண்களின் பாரத்தைக் குறைக்க ஆண்கள் முயற்சி செய்யவேண்டும் என்கிற கருத்தை வலியுறுத்தும் குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார் ஷாந்தனு பாக்யராஜ்.

மனைவி கிக்கி விஜய்யுடன் இணைந்து நடித்து, கொஞ்சம் கரோனா நிறைய காதல் என்கிற குறும்படத்தை இயக்கி, அதைக் கடந்த வாரம் வெளியிட்டார் ஷாந்தனு பாக்யராஜ். கரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டுக்குள்ளேயே இந்தக் குறும்படத்தை உருவாக்கியுள்ளார்.

இயக்குநராக என்னுடைய முதல் முயற்சி. தொழில்முறை உபகரணங்கள் இன்றி ஐபோனில் மட்டுமே படமாக்கப்பட்ட படம் இது என்று கூறியுள்ளார்.

ஷாந்தனுவின் இந்தக் குறும்படத்துக்குத் திரையுலகப் பிரபலங்களும் ரசிகர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் தன்னுடைய குறும்படத்தை வீட்டுப் பணிப்பெண் படமாக்கியதாக ஷாந்தனு கூறியுள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:

குறும்படத்தைப் படமாக்கியவர் யார் என்று எண்ணுபவர்களுக்கு - எங்கள் வீட்டிலேயே வசிக்கும் பணிப்பெண் யுவஸ்ரீ. தெரியாத திறமைகள் எங்கும் உள்ளன. நாம் தான் அவற்றைக் கண்டுபிடிக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT