முகப்பு
செய்திகள்

பா. இரஞ்சித் படத்தில் கதாநாயகனாக நடிக்கும் யோகி பாபு

பிரபல இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் யோகி பாபு.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:42 PM
yogi babu
பகிர்:

பிரபல இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் யோகி பாபு.

கோல்டன் ரேசியோ ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் கார் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஐந்து படங்களை பா. இரஞ்சித்தின் நீலம் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய இரு படங்களை பா. இரஞ்சித் தயாரித்துள்ளார்.

லெனின் பாரதி, மாரி செல்வராஜ், அகிரன் மோசஸ், பிராங்கிளின் ஜகோப், சுரேஷ் மணி ஆகியோர் இந்த ஐந்து படங்களையும் தயாரிக்கவுள்ளார்கள். இவர்களில் எந்த இயக்குநர் யோகி பாபு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என இன்னும் தெரிவிக்கப்படவில்லை. பா. இரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யோகி பாபு தற்போது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். பா. இரஞ்சித், ஆர்யா நடிக்கும் படத்தை அடுத்ததாக இயக்கவுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →