முகப்பு
செய்திகள்

வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் நடிக்கும் சசிகுமார்

பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் சசிகுமார் நடிக்கவுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:47 PM
பகிர்:

பிரபல இயக்குநர் வெற்றிமாறன் கதை, திரைக்கதையில் சசிகுமார் நடிக்கவுள்ளார்.

இப்படத்துக்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியும் கதிரேசனின் ஃபைவ்ஸ்டார் கிரியேசன்ஸும் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.

சச்சி இயக்கிய அய்யப்பனும் கோஷியும் என்கிற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் சசிகுமார் நடிப்பதாகத் தகவல் வெளியான நிலையில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சசிகுமார் அடுத்ததாக முந்தானை முடிச்சு ரீமேக்கில் நடிக்கவுள்ளார். பாக்யராஜ், ஊர்வசி வேடங்களில் சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளார்கள். கே. பாக்யராஜ் திரைக்கதை எழுத ஜே.எஸ்.பி. சதீஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார்.

அசுரன் படத்துக்கு அடுத்ததாக சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்தை வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இதற்கடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்கவுள்ளார். இந்த இரு படங்களுக்குப் பிறகு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியின் 5-வது படம் தொடங்கவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.