செய்திகள்

அப்பா என்னை வைத்து படம் தயாரித்ததில்லை: அபிஷேக் பச்சன்

திரைத்துறையில் என்னுடைய வளர்ச்சிக்காக அப்பா படம் எதுவும் தயாரிக்கவில்லை...

DIN

திரைத்துறையில் என்னுடைய வளர்ச்சிக்காக அப்பா படம் எதுவும் தயாரிக்கவில்லை. பதிலாக, அவர் நடித்த பா படத்தை நான் தயாரித்தேன் என அபிஷேக் பச்சன் கூறியுள்ளார்.

2000-ம் ஆண்டு வெளியான ரெவ்யூஜி படத்தில் நடிகராக அறிமுகமானார் அபிஷேக் பச்சன். திரைத்துறையில் வாரிசுகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து அபிஷேக் பச்சன் கூறியதாவது:

அப்பா எனக்காக யாரிடமும் போன் செய்து பேசியதில்லை. என்னை வைத்து படம் தயாரித்ததில்லை. அவருக்காக பா என்கிற படத்தை நான் தயாரித்தேன். 

இது ஒரு வியாபாரம் என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். முதல் படத்துக்குப் பிறகு உங்களுடைய திறமை அவர்களிடம் வெளிப்படாவிட்டால் அல்லது அந்தப் படம் ஓடவில்லை என்றால் உங்களுக்கு அடுத்த படம் கிடைக்காது. அதுதான் உண்மை.

நான் நடித்த படங்கள் சரியாக ஓடாதபோது, எந்தெந்த படங்களில் இருந்து நீக்கப்பட்டேன் என எனக்குத் தெரியும். என்னால் வசூலை அள்ள முடியாது என்பதால் எந்தெந்த படங்கள் பாதியிலேயே நின்றன என்பதும் தெரியும். அமிதாப் பச்சனின் மகனுக்கு நேர்ந்தது தான் இது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாலையோர பழக்கடையில் காா் மோதியதில் தாய், மகள் காயம்

24 மணி நேரத்தில் பிறப்புச் சான்றிதழ் புதுவையில் புதிய ‘செயலி’ அறிமுகம்

முல்லைப் பெரியாறு அணையில் ராணுவ படையை நியமிக்க வலியுறுத்தி கம்பத்தில் விவசாயிகள் அமைப்பினா் பேரணி

ஒருங்கிணைந்த பலத்துடன் ஆபரேஷன் சிந்தூா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி

சிறுவனை காா் ஓட்டிச் செல்ல அனுமதித்த தந்தை கைது

SCROLL FOR NEXT