முகப்பு
செய்திகள்

அமிதாப் பச்சனை இயக்குகிறார் அஜய் தேவ்கன்

ஏழு வருடங்கள் கழித்து அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கிறார் அஜய் தேவ்கன். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:49 PM
பகிர்:

ஏழு வருடங்கள் கழித்து அமிதாப் பச்சனுடன் இணைந்து நடிக்கிறார் அஜய் தேவ்கன். 

அமிதாப் பச்சனும் அஜய் தேவ்கனும் கடைசியாக 2013-ல் வெளியான சத்யகிரஹா படத்தில் இணைந்து நடித்தார்கள். இந்நிலையில் மே டே என்கிற படத்தை அஜய் தேவ்கன் இயக்குகிறார். இந்தப் படத்தில் அமிதாப் பச்சனும் நடிக்கவுள்ளார். விமானி வேடத்தில் நடிப்பதோடு தயாரிக்கவும் செய்கிறார் அஜய் தேவ்கன். 

புஜ் படத்தில் அஜய் தேவ்கன் தற்போது நடித்து வருகிறார். கேபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியைத் தற்போது தொகுத்து வழங்கி வருகிறார் அமிதாப் பச்சன். டிசம்பரில் ஹைதராபாத்தில் மே டே படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. 

இந்தப் படம் தவிர பிரபாஸ் - தீபிகா படுகோன் நடிக்கும் படத்திலும் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார். இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

முழு கட்டுரையைப் படிக்க →