நிதி அகர்வால்: தமிழ்த் திரையுலகில் அட்டகாசமாக அறிமுகமாகியுள்ள புதிய முகம்!
மூன்று தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக நடித்து தமிழ்த் திரையுலகில் நுழைந்தவுடன்...
ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட நிதி அகர்வால், ஹைதராபாத்தில் பிறந்து பெங்களூரில் வளர்ந்தவர்.
2017-ல் முன்னா மைக்கேல் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதன்பிறகு வரிசையாக மூன்று தெலுங்குப் படங்களில் நடித்துவிட்டார்.
இப்போது, மூன்று தமிழ்ப் படங்களின் கதாநாயகியாக நடித்து தமிழ்த் திரையுலகில் நுழைந்தவுடன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜெயம் ரவியுடன் இணைந்து பூமி படத்தில் நடித்துள்ள நிதி அகர்வால், அடுத்ததாக சிம்புவின் ஜோடியாக ஈஸ்வரன் படத்தில் நடித்துள்ளார். மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்திலும் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது.
ஐஸ்வர்யா ராய் அளித்த தாக்கத்தினால் நடிப்பின் மீது ஆசை கொண்டு திரையுலகினுள் நுழைந்துள்ள நிதி அகர்வால், கோலிவுட் தனக்கு அளித்த அட்டகாசமான வரவேற்பினால் தற்போது முறையாக தமிழ் கற்றுக்கொண்டு வருகிறார்.
பூமி, ஈஸ்வரன் படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன. இதற்குப் பிறகு நிதி அகர்வாலுக்கு மேலும் பல தமிழ்ப் படங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.