செய்திகள்

விமான நிலையத்தில் பல மணி நேரம் காக்கவைக்கப்பட்ட நடிகை ஜூஹி சாவ்லா: ட்விட்டரில் புகார்!

விமான நிலையத்தில் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் ட்விட்டர் வழியாகப் புகார் அளித்துள்ளார்

DIN

விமான நிலையத்தில் பல மணி நேரம் காக்க வைக்கப்பட்டதால் ட்விட்டர் வழியாகப் புகார் அளித்துள்ளார் நடிகை ஜூஹி சாவ்லா. 

ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் இணை உரிமையாளராக உள்ளார் பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா. ஐபிஎல் 2020 போட்டி முடிந்த பிறகு துபையிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார். விமான நிலையத்தில் தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து அவர் விடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

விமான நிலையத்தில் மருத்துவச் சான்றிதழ் வழங்கும் கவுன்டர்களில் அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகளைப் பயன்படுத்தும்படி விமான நிலைய மற்றும் அரசு அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். இதனால் பல பயணிகள் நீண்ட நேரமாகக் காத்திருக்கிறார்கள். ஒவ்வொரு விமானமாக வந்துகொண்டிருக்கிறது. இதனால் காத்திருக்கும் பயணிகள் அதிகமாகிறார்கள். பரிதாபமான, வெட்கக்கேடான நிலை என்றார்.

இதையடுத்து இந்திய விமான நிலைய ஆணையம் சார்பில் இதற்குப் பதில் அளிக்கப்பட்டுள்ளது. உங்களுடைய சிரமத்துக்கு வருந்துகிறோம். எந்த விமான நிலையத்தில் இது நடந்தது என்று தெரிவித்தால் நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்துஜா குழுமம் ரூ.7,500 கோடி முதலீடு: முதல்வா் முன்னிலையில் ஒப்பந்தம்

தனிமையிலொரு இரவில் தற்படம்... சஞ்சி ராய்!

மலரோணப் பாட்டு... பார்வதி நாயர்!

அரேபிய நேசம்... அனுஷ்கா சென்!

மீரட்: பெண்களைக் கடத்தும் நிர்வாண கும்பல்! போலீஸார் விசாரணை

SCROLL FOR NEXT