முகப்பு
செய்திகள்

கில்லி & 96 படங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமை: த்ரிஷா வெளியிட்ட விடியோ

விமான நிலையத்தில் சோகத்துடன் த்ரிஷாவுக்கு விஜய்யும் விஜய் சேதுபதியும் விடைகொடுக்கிறார்கள்.

Updated On : 17 அக்டோபர், 2020 at 11:49 AM
காட்சிகளில் உள்ள ஒற்றுமை
பகிர்:

தான் நடித்த கில்லி மற்றும் 96 படங்களில் சில காட்சிகளில் உள்ள ஒற்றுமை குறித்த சுவாரசியமான விடியோ ஒன்றை நடிகை த்ரிஷா வெளியிட்டுள்ளார்.

2004-ல் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்த படம் - கில்லி. அதேபோல 2018-ல் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம் குமார் இயக்கி படம் - 96.

இரண்டுமே பெரிதளவில் வெற்றி பெற்ற படங்கள். இந்நிலையில் இரு படங்களிலும் உள்ள சில காட்சிகளில் ஒற்றுமை தென்படுகின்றன. த்ரிஷா சோகத்துடன் விஜய்யுடன் இணைந்து பேருந்தில் வருகிறார். 96-ல் பேருந்துக்குப் பதிலாக கார். அதேபோல விமான நிலையத்தில் சோகத்துடன் த்ரிஷாவுக்கு விஜய்யும் விஜய் சேதுபதியும் விடைகொடுக்கிறார்கள். கண்ணீருடன் விமானத்தில் த்ரிஷா அமந்திருப்பது என இரு படத்திலும் ஒரேமாதிரியான சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Advertisement

இதன் விடியோக்களைத் தொகுத்து தனது சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை த்ரிஷா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.