ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படம்: பூமிகா படத்தின் போஸ்டர் வெளியீடு!
பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
கதாநாயகிக்கு முக்கியத்துவம் இந்தப் படத்தின் முதல் தோற்ற போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் 25-வது படத்துக்கு பூமிகா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2010-ல் நீதானா அவன் படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர், ஐஸ்வர்யா ராஜேஷ். 2015-ல் வெளியான காக்கா முட்டை படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ஒவ்வொரு வருடம் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.
Advertisement
இப்படத்தை ரதிந்திரன் இயக்குகிறார். ஒளிப்பதிவு - ராபர்ட், இசை - ப்ரித்வி சந்திரசேகர். இதற்கு முன்பு அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இது வேதாளம் சொல்லும் கதை என்கிற படத்தை ரதிந்திரன் இயக்கியுள்ளார்.
பூமிகா படத்தின் முதல் தோற்ற போஸ்டரைச் சமூகவலைத்தளங்களில் ஜெயம் ரவியும் தமன்னாவும் வெளியிட்டுள்ளார்கள்.