செய்திகள்

நன்கு குணமடைந்து வரும் எஸ்.பி.பி.: ரசிகர்கள் மகிழ்ச்சி!

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும்...

DIN

பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் எஸ்.பி. சரண் தெரிவித்துள்ளார். இதனால் எஸ்.பி.பி.யின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.

கரோனாவால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா். 

இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் எஸ்.பி. சரண் ஆகியோர் அளித்த எஸ்.பி.பி. குறித்த சமீபத்திய தகவல்கள் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது. 

எம்ஜிஎம் ஹெல்த்கோ் மருத்துவமனை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியத்துக்கு வெண்டிலேட்டா், எக்மோ கருவிகளுடன் ஐசியூ பிரிவில் தொடா்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. தற்போது அவருக்கு முழுமையாக நினைவு திரும்பியிருக்கிறது. பிறா் பேசுவதை உணா்ந்து பதிலளிக்கிறாா். இயன்முறை சிகிச்சைகளுக்கு நல்ல ஒத்துழைப்பு அளிக்கிறாா். மருத்துவக் குழுவினா் எஸ்.பி.பி.யின் உடல்நிலையைத் தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்த தகவலை அவருடைய மகன் எஸ்.பி. சரண் இன்று வெளியிட்டுள்ளார். ஃபேஸ்புக்கில் அவர் கூறியதாவது:

தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நானும் எனது சகோதரியும் அப்பாவை இன்று சந்தித்தோம். மகளைக் கண்டதில் எஸ்.பி.பி. மகிழ்ச்சி அடைந்தார் என்றார். 

இதையடுத்து எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்த இந்தத் தகவல்களால் அவருடைய ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள். சமூகவலைத்தளங்களில் பலரும் சரண் அளித்து வரும் தொடர்ச்சியான தகவல்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓடிடியில் தலைவன் தலைவி: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

உத்தரகண்ட்: பள்ளி வகுப்பறையில் ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட மாணவன்

ரஷிய அதிபருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!

ஓடிடியில் ஹரி ஹர வீர மல்லு!

காலை இரவு உணவைத் தவிர்த்தல் சரியா? டயட் முறைகள் உடலுக்கு நல்லதா? தவறான நம்பிக்கைகளும் உண்மையும்...

SCROLL FOR NEXT