முகப்பு
செய்திகள்

ஊதா கலர் ரிப்பன் பாடலைப் பலமுறை பார்த்து ரசித்துள்ளேன்: சிவகார்த்திகேயனைப் பாராட்டிய பிரபல தெலுங்கு நடிகர்

நீங்கள் நடித்த ஊதா கலர் ரிப்பன் பாடலை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் பலமுறை பார்த்து ரசித்துள்ளேன் என்று...

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:


சிவகார்த்திகேயன் இடம்பெற்ற ஊதா கலர் ரிப்பன் பாடலைப் பலமுறை பார்த்து ரசித்ததாகப் பிரபல நடிகர் பவன் கல்யாண் கூறியுள்ளார்.

ஜனசேனா கட்சியின் தலைவரும், தெலுங்கு நடிகருமான பவன்  கல்யாண் தனது 49-வது பிறந்த நாளைச் சமீபத்தில் கொண்டாடினார். ட்விட்டர் வழியாக நடிகர் சிவகார்த்திகேயன், பவன் கல்யாணுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இதற்கு, பவன் கல்யாண் பதில் அளித்ததாவது:

உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி சிவகார்த்திகேயன். உங்களின் வெற்றிகளுக்கு வாழ்த்துகள். நீங்கள் நடித்த ஊதா கலர் ரிப்பன் பாடலை எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் பலமுறை பார்த்து ரசித்துள்ளேன் என்று கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →