செய்திகள்

ஓடிடியில் வெளியாகவுள்ள பாலாஜி தரணிதரனின் ஒரு பக்க கதை படம்!

DIN

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் அடுத்ததாக இயக்கிய படம் - ஒரு பக்க கதை.

2015-ல் வெளியாக இருந்த இந்தப் படம் பல காரணங்களால் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகவுள்ளது.

ஜீ5 தளத்தில் செப்டம்பர் 25 அன்று இப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

ஒரு பக்க கதை படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதி நடிப்பில் சீதக்காதி படத்தை பாலாஜி தரணிதரன் இயக்கினார். 2018-ல் அது வெளியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT