முகப்பு
செய்திகள்

குறும்பட இயக்குநருடன் கூட்டணி: விஷாலின் 31-வது படம் அறிவிப்பு

எது தேவையோ அதுவே தர்மம் என்கிற குறும்படத்தை இயக்கி கவனம் பெற்றவர்...

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:55 PM
பகிர்:

விஷாலின் 31-வது படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எது தேவையோ அதுவே தர்மம் என்கிற குறும்படத்தை இயக்கி கவனம் பெற்றவர் து.ப. சரவணன். யூடியூபில் 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்ற இக்குறும்படம் விஷாலை மிகவும் ஈர்த்ததால் சரவணன் இயக்கும் முதல் படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார். 

சரவணன் இயக்கத்தில் விஷால் நடிக்கும் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

எனிமி, துப்பறிவாளன் 2 என இரு படங்களில் விஷால் நடித்து வருகிறார். அரிமா நம்பி, இருமுகன், நோட்டா படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர், அடுத்ததாக விஷால் - ஆர்யா நடிக்கும் எனிமி என்கிற படத்தை இயக்குகிறார். இசை - தமன். மிஷ்கினுடன் மோதல் ஏற்பட்டதால் அவருக்குப் பதிலாக துப்பறிவாளன் 2 படத்தைத் தானே இயக்க முடிவெடுத்துள்ளார் விஷால். இப்படத்துக்கு இசை - இளையராஜா.   

முழு கட்டுரையைப் படிக்க →