செய்திகள்

ஒரே நாளில் திரையரங்கிலும் ஓடிடியிலும் வெளியாகும் சல்மான் கான் படம்

DIN

சல்மான் கான் நடித்த ராதே படம் ஒரே நாளில் திரையரங்கிலும் ஓடிடியிலும் வெளியாகவுள்ளது.

சல்மான் கான் நடிப்பில் பிரபு தேவா இயக்கியுள்ள படம் - ராதே.

சல்மான் கான், திஷா பதானி, ஜாக்கி ஷெராப், ரன்தீப் ஹூடா போன்றோர் நடித்துள்ளார்கள். 

10 வருடங்களுக்கு முன்பு, வாண்டட் என்கிற சூப்பர் ஹிட் படம் மூலமாக சல்மான் கானும் பிரபுதேவாவும் முதல்முதலாக இணைந்தார்கள். அது பிரபுதேவா இயக்கிய முதல் ஹிந்திப் படம். இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் தபாங் 3 வெளியானது. அடுத்ததாக ராதே படத்தில் இருவரும் 3-வது முறையாக இணைந்துள்ளார்கள்.

ராதே படம் கடந்த வருடம் மே மாதம் வெளிவருவதாக இருந்தது. எனினும் கரோனா அச்சுறுத்தல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் மே 13 அன்று திரையரங்கில் வெளியாகும் ராதே படம் அதே நாளில் ஜீ பிளெக்ஸ் ஓடிடியிலும் வெளியாகிறது. இதற்கென தனியாகக் கட்டணம் செலுத்தி பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

SCROLL FOR NEXT