செய்திகள்

இயக்குநர் தாமிரா மறைவு: இயக்குநர் ஷங்கர் இரங்கல்

அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

DIN

கரோனா பாதிப்பால் இயக்குநர் தாமிரா மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 52.

மறைந்த இயக்குநர் கே. பாலசந்தரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் தாமிரா என்கிற காதர் முகைதீன். 2010-ல் இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான ரெட்டைச் சுழி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்தப் படத்தில் பிரபல இயக்குநர்களான பாரதிராஜா, பாலசந்தர் நடித்திருந்தார்கள்.

இதன்பிறகு சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடித்த ஆண் தேவதை படத்தை இயக்கினார். பிறகு தொலைக்காட்சித் தொடர்களை இயக்கி வந்தார்.

சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார் தாமிரா. இதற்காக சென்னையிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

தாமிராவின் மறைவுக்குத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

தாமிராவின் முதல் படத்தைத் தயாரித்த இயக்குநர் ஷங்கர், ட்விட்டரில் கூறியதாவது:

தாமிரா காலமானதைக் கேள்விப்பட்டு வேதனையடைந்தேன். அவருடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

மதிமுக, மநீம, மமக உடன் இன்று திமுக பேச்சுவார்த்தை!

டிரம்ப் இல்லத்தில் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்த இளைஞா் சுட்டுக் கொலை

இன்று வெற்றி யாருக்கு? தினப்பலன்கள்!

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

SCROLL FOR NEXT