செய்திகள்

சன் டிவி தொடரில் களமிறங்கும் சோனியா அகர்வால் - சன் டிவி வெளியிட்ட விடியோ

நடிகை சோனியா அகர்வால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 

DIN

நடிகை சோனியா அகர்வால் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 

காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால். தொடர்ந்து கோவில், மதுர, 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஒரு நாள் ஒரு கனவு, திருட்டுப்பயலே உள்ளிட்ட படங்களில் நடித்தார். 

இதில் பெரும்பாலான படங்கள் வெற்றிப் படங்களாக அவருக்கு அமைந்தன. இருப்பினும் இயக்குநர் செல்வராகவனை காதல் திருமணம் செய்து கொண்டு திரைத்துறையில் இருந்து ஒதுங்கினார். பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் விவாகரத்து செய்துகொண்டனர். 

விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க துவங்கிய அவர் சிம்புவுடன் இணைந்து 'வானம்', 'பாலக்காட்டு மாதவன்', 'தடம்', 'அயோக்யா' போன்ற படங்களில் நடித்தார். பிரபு தேவாவுடன் இணைந்து அவர் நடித்த 'பாகிரா' படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. தமிழ் மட்டுமல்லாமல், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் அவர் நடித்துள்ளார். 

திரைப்படங்கள் மட்டுமல்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாணல் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டவர்' இல்லம் தொடரில் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். இதற்கான முன்னோட்டத்தை சன் டிவி வெளியிட்டுள்ளது. பாண்டவர் இல்லம் தொடரில் சோனியா அகர்வாலின் வருகை கூடுதல் சுவாரசியத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணை நீர்வரத்து: இன்றைய நிலவரம்!

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

SCROLL FOR NEXT