செய்திகள்

தமிழில் அறிமுகமாகும் நடிகையை வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் இணைந்து தமிழில் அறிமுகமாகும் ஊர்வசி ராவ்டேலா என்ற நடிகையை வாழ்த்தியுள்ளனர்.  

DIN

நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'அண்ணாத்த' படத்தின் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்தப் படம் வருகிற தீபாவளியை முன்னட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார். சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் போலவே இந்தப் படத்திலும் உணர்வுப் பூர்வமான காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் என ஒரு பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

இந்த நிலையில் சரவணா ஸ்டோர்ஸ் புகழ் லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் ஊர்வசி ராவ்டேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த விடியோ, ரஜினிகாந்த்தின் மனைவி லதாவுடன் அவர் உரையாடும் விடியோ அழைப்பு. 

அதில் லதா ரஜினிகாந்த், அவர் முதல் படத்துக்கு வாழ்த்துகள் தெரிவிக்கிறார். மேலும் ஊர்வசி மேற்கொள்ளும் பணிகளுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் தான் செய்வதாகவும் தெரிவிக்கிறார். இதனைப் பகிர்ந்த அவர், ''ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் இணைந்து என் முதல் படத்துக்கு வாழ்த்தினார்கள். இதனை விட வேறு என்ன வேண்டும்?!. குழந்தைகளின் அமைதிக்காக ஊர்வசி ராவ்டேலா என்ற எனது அமைப்பின் சார்பாக உங்களுடன் இணைந்து பணியாற்றக் காத்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

லெஜண்ட் சரவணா மற்றும் ஊர்வசி ராவ்டேலா இணைந்து நடிக்கும் படத்தை 'உல்லாசம்', 'விசில்' படங்களை இயக்கிய ஜேடி-ஜெர்ரி இயக்குகின்றனர். இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் மறைந்த நடிகர் விவேக், யோகி பாபு, நாசர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT