டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 7 காசுகள் உயர்ந்து ரூ. 93.44 ஆக நிறைவு!ஃபெட் வட்டி விகித உயர்வு அச்சம் எதிரொலி: சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு!ரயில் பயணத்தில் உணவு ஆர்டர் செய்பவரா? இந்த 14 தளங்களை தவிர்த்திடுங்கள்! ஐஆர்சிடிசி அறிவுரைசோத்துப்பாறை அணையைத் திறந்த தவெகவினர்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்!முதல்வர் விஜய் எதைப் பற்றி பேசியிருக்கிறார்? புதிதாகக் கேட்பதற்கு! காவிரி குறித்து ஸ்டாலின் பதில்தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கே தெரியாமல் திறந்த தவெகவினரால் பரபரப்பு!ராகுலின் தொலைபேசி அழைப்பு! மு.க. ஸ்டாலின் விளக்கம்கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு எப்படியிருக்கிறார்? தகவல் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு!திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! இலவச தரிசன டிக்கெட் முன்பதிவு தொடங்கியது!என்கவுன்டர் செய்யப்பட்ட லஷ்கர் பயங்கரவாதி லத்தீஃப் பட் யார்? அதிரவைக்கும் பின்னணிவேலைகளில் மட்டுமல்ல... தேர்வுகளிலும் மூக்கை நுழைக்கும் ஏஐ! ஸ்மார்ட் கண்ணாடி மூலம் மோசடி!தமிழ்நாட்டில் நாளை கனமழை பெய்யாது! மஞ்சள் எச்சரிக்கை வாபஸ்!அரக்கோணம் அரசு மருத்துவமனை உள்ளிட்ட நலத் திட்டங்களைத் தொடக்கி வைத்தார் முதல்வர் விஜய்பொங்கல் ரிடர்ன்! முடிந்தது ரயில் டிக்கெட் முன்பதிவு!உலக பாரம்பரிய வாரம்: மாமல்லபுரத்தில் நாளை (நவ. 19) இலவச அனுமதி!ஜம்மு - காஷ்மீர் மசூதிக்குள் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா தளபதி என்கவுன்டர்!வ.உ.சி.யின் கொள்கைகளைப் பின்பற்றி முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம்! முதல்வர் விஜய்!செம்மஞ்சேரியில் ஒலிம்பிக் சிட்டி அமைக்க டெண்டர் வெளியீடு!தீவிரப் புயலாக வலுப்பெற்றது அக்வான்!ஜம்மு-காஷ்மீரில் மோதல்! லஷ்கர்-இ-தொய்பா தளபதியை சுற்றிவளைத்த இந்திய ராணுவம்!தமிழக சட்டப்பேரவை குளிா்கால கூட்டத் தொடருக்கு வாய்ப்பில்லை? ஆற்று மணல் முறைகேடு: திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் உள்பட 27 போ் பெயா்கள் வெளியீடு எஸ்ஐஆருக்கு எதிரான வழக்குகள்: டிச. 9-இல் உச்சநீதிமன்றம் விசாரணை பிரதமா் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சா்கள் கூட்டம்

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு இளம் ஹீரோ: இயக்குநரின் அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

Updated On :

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் 'விக்ரம்'. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, 'சர்கார்' படத்துக்கு ஒளிப்பதிவு செய்த கிரிஷ் கங்காதரன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கியது. படப்பிடிப்பில் விஜய் சேதுபதியும் ஃபகத் ஃபாசிலும் கலந்துகொண்டார்கள். 

இந்தப் படத்தில் கமல்ஹாசனின் மகனாக ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த நிலையில் இதனை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து உறுதிப்படுத்தியுள்ளார். 

Story image

நடிகர் கமல்ஹாசனுடன் ஜெயராம் இணைந்து தெனாலி, பஞ்சதந்திரம், உத்தம வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் காளிதாஸ் கதாநாயகனாக நடித்த மீன் குழம்பும் மண்பானையும் படத்தில் நடிகர் கமல்ஹாசன் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸில் 'பாவக் கதைகள்' தொடரில் சுதா கொங்கரா இயக்கத்தில் 'தங்கம்' படத்தில் திருநங்கையாக நடித்திருந்த காளிதாஸ் ஜெயராமின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஒரே படத்தில் திறமையான கலைஞர்கள் இணைந்திருப்பது, ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.