சினிமாவில் 50 வருடங்களை நிறைவு செய்த நடிகர் மம்மூட்டி 
செய்திகள்

சினிமாவில் 50 வருடங்களை நிறைவு செய்த நடிகர் மம்மூட்டி

கேரளத்தின் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவடைத்திருக்கிறது

DIN

கேரளத்தின் மெகா ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் மம்மூட்டி சினிமாவில் நடிக்க வந்து 50 ஆண்டுகள் நிறைவடைத்திருக்கிறது. 1971 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி வெளியான  'அனுபவங்கள் பலிச்சாக்கல்' என்கிற திரைப்படம் மூலம் தன் திரைப்பயணத்தைத் தொடர்ந்தார். 

பின் இதுவரை தமிழ்,மலையாளம்,கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி , மராத்தி என ஆறுமொழிகளில் 400 படங்களுக்கு மேல் நடித்துவிட்டார். சிறந்த நடிப்பிற்காக 3 முறை தேசிய விருதும் , 6 முறை மாநில அரசின் விருதும் , பத்மஸ்ரீ மற்றும் இரண்டு கௌவுரவ டாக்டர் பட்டமும் பெற்றிருக்கிறார்.

'வடக்கன் வீரகதா' 'பழசிராஜா' 'பேரன்பு'  போன்ற தனித்துவமான  படங்கள் அவரின் நடிப்பில் வெளிவந்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறது .

தற்போதும் இளம் நடிகர்களுக்கு இணையாக அதே இளமையின் உற்சாகம் கொண்டு நடித்து வருகிறார். 50 வது ஆண்டைக் கடக்கும் மம்மூட்டிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். இந்நிலையில் மற்றொரு உச்ச நட்சத்திரமான மோகன்லாலும் தன்னுடைய வாழ்த்துக்களை பதிவு செய்திருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வட தமிழகம் நோக்கி 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வரும்‘டித்வா’புயல்!

மேஷ ராசிக்கு லாபம்: தினப்பலன்கள்!

இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி

பைக் மீது காா் மோதல்: முதியவா் உயிரிழப்பு

அரசு மாதிரிப் பள்ளியில் பசுமை விழா

SCROLL FOR NEXT