செய்திகள்

இதே நாளில் தோனியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் செய்த சம்பவங்கள் - நிகழ்ந்தது வரலாறு

வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் துவங்கிய தினமும், எம்.எஸ்.தோனி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட தினமும் ஒரே தினம் (ஆகஸ்ட் 6)  என்பதால், இருவரின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். 

DIN

வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் துவங்கிய தினமும், எம்.எஸ்.தோனி 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு கேப்டனாக அறிவிக்கப்பட தினமும் ஒரே தினம் (ஆகஸ்ட் 6)  என்பதால், இருவரின் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். 

இசையமைப்பாளர், இயக்குநர் கங்கை அமரனின் மூத்த மகனான வெங்கட் பிரபு 'உன்னைச் சரணடைந்தேன்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் நடிகர் அஜித்தின் 'ஜீ', விஜய்யின் 'சிவகாசி' உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார். 

இதனையடுத்து அவர் இயக்குநராக அறிமுகமான படம் 'சென்னை 28'. எஸ்பிபி சரண் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவான இந்தப் படம் நல்ல வெற்றியை பதிவு செய்தது. 

இந்த நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 15 வருடங்களுக்கு முன் அதாவது 2006 ஆம் ஆண்டு இதே நாளில் (ஆகஸ்ட் 7) துவங்கப்பட்டது. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''காலம் எவ்வளவு வேகமாக செல்கிறது. 15 வருடங்களுக்கு முன் நான் என் முதல் படத்தை துவங்கினேன். கடவுளும், நீங்களும் என்னைத் தொடர்ந்து பயணிக்க உத்வேகம் அளிக்கிறீர்கள். உங்கள் மனதில் இடம் அளித்ததற்கு என்றும் நன்றிக் கடன்பட்டிருப்பேன்'' என்று தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் கிரிக்கெட் எம்.எஸ்.தோனியும் கடந்த 2007 ஆம் ஆண்டு 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கு இன்றைய தினம் தான் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு சம்பந்தங்களையும் தொடர்புபடுத்தி ரசிகர்கள், எம்.எஸ்.தோனி மற்றும் வெங்கட் பிரபுவிற்கும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள் நலனில் சமரசம்! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

ஊர்க்காவலன் (பாகம்-2)

எப்ஸ்டீன் கோப்புகள்! ரஷிய பெண்ணுடன் உறவு; பில்கேட்ஸுக்கு பால்வினை நோய்?

விசில்

நிலம், நீர், நிழல்: தமிழ் இலக்கியங்களில் சூழலியல்

SCROLL FOR NEXT