முகப்பு
செய்திகள்

விஜய்யுடன் கூட்டணி சேரும் செல்வராகவன்: ரசிகர்களுக்கு விருந்து படைத்த புதிய அறிவிப்பு

விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:


விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கவுள்ளதாக படத் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத். படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார்.

இந்த நிலையில் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் சனிக்கிழமை அறிவிப்பை வெளியிட்டது. இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிக்கவுள்ளார் என்பதுதான் அந்த அறிவிப்பு.

விஜய் - செல்வராகவன் கூட்டணி என்பது தமிழ் சினிமாவின் கனவுக் கூட்டணி. 

இந்த அறிவிப்பின் மூலம் நடிப்பினால் இணையும் இந்தக் கூட்டணி விரைவில் செல்வராகவன் இயக்கத்தின்மூலம் இணையும் என்ற எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் சாணிக் காயிதம் படத்தில் இயக்குநர் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகிறார்.

முழு கட்டுரையைப் படிக்க →