செய்திகள்

எதிர்காலம் குறித்து ஆச்சர்யம்: நாடி ஜோதிடம் பார்த்த 'பிக் பாஸ்' ஜூலி

உங்களுடைய கடந்த காலம் மட்டுமின்றி எதிர்காலத்தையும் 100% சரியாகச் சொன்னால் உங்களுக்கு ஆர்வம் ஏற்படாதா

DIN

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜூலி, நாடி ஜோதிடம் பார்த்தது குறித்து பதிவு எழுதியுள்ளார். 

ஜல்லிக்கட்டுப் போராட்டம், பிக்பாஸ் என பிரபலமானவர் ஜூலி. தற்போது திரைப்படங்களில் நடித்துவருகிறார். 

இந்நிலையில் நாடி ஜோதிடம் பார்த்தது தொடர்பாக இன்ஸ்டகிராமில் பதிவு எழுதியுள்ளார் ஜூலி. அதில் அவர் கூறியதாவது:

வடபழனியில் நாடி ஜோதிடரை இன்று பார்த்தேன். சரியாகக் கணித்த நமது முன்னோர்களின் மீது நம்பிக்கை ஏற்படுத்தியது. 

உங்களுடைய கடந்த காலம் மட்டுமின்றி எதிர்காலத்தையும் 100% சரியாகச் சொன்னால் உங்களுக்கு ஆர்வம் ஏற்படாதா? சுவடியைப் பார்த்து அவர் சொன்ன வார்த்தைகள் எல்லாம் உண்மையாக இருந்தன. நான் ஆச்சர்யம் அடைந்தேன். அவருடைய வார்த்தைகளால் மட்டுமல்ல அவர் நம் வாழ்க்கையைக் கணித்த விதம், எதிர்காலம் பற்றி சொன்னதைக் கேட்டும் எனக்கு நேர்மறை எண்ணங்கள் ஏற்பட்டன. அவரைப் பற்றி அனைவரிடமும் நான் பரிந்துரைப்பேன் என்று கூறி நாடி ஜோதிடரின் விவரங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசுப் பேருந்து மோதி வளையல் வியாபாரி பலி

மேல்மலையனூா் கோயிலில் மாசித் திருவிழா தோ் செய்யும் பணி தொடக்கம்

நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்கு, சணல் ஏற்பாடு செய்ய கோரிக்கை

கும்பகோணத்தில் முதல்வா் ஸ்டாலினுக்கு கட்சியினா் உற்சாக வரவேற்பு

திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படாது: துரை வைகோ

SCROLL FOR NEXT