சிம்புவின் படத்துக்கு சிக்கல்?: 'கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள்' - சிம்புவின் அம்மா வருத்தம்
நடிகர் சிம்புவின் படத்துக்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக அவரது அம்மா உஷா ராஜேந்தர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.
நடிகர் சிம்புவின் படத்துக்கு கட்டப்பஞ்சாயத்து செய்வதாக அவரது அம்மா உஷா ராஜேந்தர் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்தார்.
நடிகர் சிம்பு நடித்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'அன்பானவன், அடங்காதவன், அசராதவன்' படத்தின்போது, நடிகர் சிம்புவுக்கும், இந்தப் பட தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனுக்கும் பிரச்னை ஏற்பட்டது. இந்தப் பிரச்னை தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்துக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம், தயாரிப்பாளர் சங்கத்தின் தடையை மீறி, 'வெந்து தணிந்தது காடு' படப்பிடிப்பில் பெப்சி அமைப்பு கலந்துகொண்டதாக தயாரிப்பாளர் சங்கம் குற்றச்சாட்டு தெரிவித்தது.
அதனைத் தொடர்ந்து பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கேட்டுக்கொண்டதன் பேரில், தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதி பெற்றே படப்பிடிப்பில் கலந்துகொண்டதாக தெரிவித்தார். இதனையடுத்து, தயாரிப்பாளர் சங்கத்துக்கும், பெப்சி அமைப்பிற்கும் மோதல் உண்டாகும் சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில், நடிகர் சிம்புவின் அம்மா உஷா ராஜேந்தர் பேசும் விடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், 'ஈஸ்வரன்' படத்துக்கும் பிரச்னை செய்தார்கள். வெந்து தணிந்தது காடு படத்தையும் துவங்கவிடவில்லை.
நடிகர் சங்கத்துக்கும், தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பிரச்சனை நடந்துகொண்டிருக்கும்போது பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி அங்கே வரவேண்டிய அவசியம் என்ன ?
இந்த கட்டப்பஞ்சாயத்து சரியாக தீர்க்கப்படவில்லை என்றால், பெப்சி அமைப்பினர் ஒத்துழைப்பு வழங்கப்படக்கூடாது என்பதற்காகவே ஆர்.கே.செல்வமணி அழைக்கப்பட்டிருக்கிறார் என்று அந்த வீடியோவில் தெரிவித்தார்.