முகப்பு
செய்திகள்

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த பூமிகா: புதிய டிரெய்லர் வெளியானது

ஆகஸ்ட் 22 அன்று மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

Updated On : 16 ஆகஸ்ட், 2021 at 4:06 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:25 AM

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பூமிகா என்கிற படத்தில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இது அவருடைய 25-வது படம். 

2010-ல் நீதானா அவன் படம் மூலமாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர், ஐஸ்வர்யா ராஜேஷ். 2015-ல் வெளியான காக்கா முட்டை படம் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பிறகு ஒவ்வொரு வருடம் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

பூமிகா படத்தை ரதிந்திரன் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு - ராபர்ட், இசை - ப்ரித்வி சந்திரசேகர். இதற்கு முன்பு அஸ்வின், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் இது வேதாளம் சொல்லும் கதை என்கிற படத்தை ரதிந்திரன் இயக்கியுள்ளார். 

Advertisement

பூமிகா படம் ஆகஸ்ட் 22 அன்று மதியம் 3 மணிக்கு விஜய் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பாகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு படம் சோனி லைவ் ஓடிடியில் நேரடியாக வெளியானதையடுத்து அவர் கதாநாயகியாக நடித்த மற்றொரு படமான பூமிகாவும் திரையரங்குகளில் நேரடியாக வெளியாகாமல் மாற்று வழியைக் கண்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அடுத்த நாள், ஆகஸ்ட் 23 அன்று நெட்பிளிக்ஸில் வெளியாகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.