செய்திகள்

மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோலை வழங்கிய நடிகர் மயில்சாமி: வைரலாகும் புகைப்படம்

திருமண விழாவில் நடிகர் மயில்சாமி மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

திருமண விழாவில் நடிகர் மயில்சாமி மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் மயில்சாமி. நடிகர்கள் வடிவேலு, விவேக் உள்ளிட்டோருடன் இணைந்து அவரது நடித்துள்ள நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரபலம். 

குறிப்பாக 'தூள்' படத்தில் நடிகர் விவேக்கிடம் திருப்பதி லட்டுக்கு பதிலாக ஜிலேபி கொடுக்கும் காட்சியை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. மிமிக்கிரி கலைஞரான நடிகர் மயில்சாமி பல்வேறு நடிகர்கள் போல் பேசக் கூடிய வல்லமை படைத்தவர் . 

சன் டிவியில் இவர் தொகுத்து  தொகுத்து வழங்கிய காமெடி டைம் மிகப் பிரபலம். இந்த நிலையில் நடிகர் மயில்சாமி, சென்னையில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் மணமக்களுக்கு திருமண பரிசாக 5 லிட்டர் பெட்ரோலை வழங்கியிருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக பெட்ரோல் விலை உச்சம் தொட்டும் வரும் நிலையில், அதனை நடிகர் மயில்சாமி தனக்கே உரிய முறையில் நகைச்சுவையாக விமர்சித்திருப்பது திருமண விழாவில் பங்கேற்ற அனைவரையும் ரசிக்க வைத்துள்ளது. மேலும், பெட்ரோல் விலை உயர்வை நடிகர் ஒருவர் விமர்சித்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூய்மைப் பணியாளா்கள் நலனில் அதிக அக்கறை காட்டுகிறாா் முதல்வா்! - நலவாரியத் தலைவா் திப்பம்பட்டி வெ. ஆறுச்சாமி

குற்றாலத்தில் சுற்றுச்சூழல் கல்வி இயற்கை முகாம்

ஆலங்குளம் அருகே ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைக்கு அடிக்கல்

23.1.1976: குழந்தை பிறப்பை குறைக்க தீவிர நடவடிக்கை வரலாம் - பிரதமர் சூசக தகவல்

பள்ளி மாணவரை அரிவாளால் வெட்ட முயன்ற சிறுவன் மீது வழக்கு

SCROLL FOR NEXT