விஜய் டிவி 'ராஜா ராணி' புகழ் சஞ்சீவ், சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் கயல் தொடரில் நடித்து வருகிறார்.
'குளிர் 100', 'நீயும் நானும்', 'உயிருக்கு உயிராக', 'சகாக்கள்' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சஞ்சீவ். இவர் கடைசியாக '13 ஆம் நம்பர் வீடு' படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடர் மூலம் சின்னத்திரையில் களமிறங்கினார்.
இதையும் படிக்க | பிரபல சின்னத்திரை தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் மரணம்
இந்தத் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தத் தொடரில் தன்னுடன் நடித்த ஆல்யா மானஸாவை, சஞ்சீவ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் அய்லா என்ற மகள் உள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆல்யா மானஸா தற்போது 'ராஜா ராணி 2' தொடரில் நடித்து வருகிறார். மற்றொரு பக்கம் சஞ்சீவ் 'காற்றின் மொழி' தொடரில் நடித்தார். இந்தத் தொடர் சமீபத்தில் முடிவுக்கு வந்தது.
இதையும் படிக்க | மணமக்களுக்கு திருமண பரிசாக பெட்ரோலை வழங்கிய நடிகர் மயில்சாமி
இதனையடுத்து அவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் 'கயல்' தொடரில் நடிக்கவிருக்கிறார். இந்தத் தொடரின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் பகிர்ந்து அறிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.