செய்திகள்

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட இயக்குநருடன் இணைகிறாரா நடிகர் விஜய் ?

DIN

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' பட இயக்குநருடன் நடிகர் விஜய் இணையவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. 

தளபதி விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்ரசர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் இயக்குநர் செல்வராகவன், அபர்ணா தாஸ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

கடந்த சில வருடங்களாக விஜய், ஒரே நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஒரு படத்தில் நடிக்கும் போது, அடுத்த படத்துக்கான கதைகளைக் கேட்பது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருப்பதாக செய்திகள் பரவின. இயக்குநர் வம்சி,  கார்த்தியும் நாகர்ஜூனாவும் இணைந்து நடித்த 'தோழா' படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இயக்குநர் வம்சிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பாடகர் கிரிஷ், நடிகர் விஜய்யுடன் வம்சி இணையவிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். ஆனால் அந்த சுட்டுரையை சில நிமிடங்களிலேயே நீக்கி விட்டார். விஜய் தரப்பில் இருந்து வந்த அழுத்தம் காரணமாக தனது பதிவை நீக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங் பெரியசாமி சொன்ன கதை, நடிகர் விஜய்க்கு பிடித்துவிட்டதாகவும் இதனால் அவர் இயக்கும் படத்தில் விஜய் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக தேசிங் பெரியசாமி, ரஜினிகாந்த்தை இயக்கலாம் என்ற தகவல் பரவியது. அதனை தேசிங் பெரியசாமி மறுத்தார். 

இயக்குநர் தேசிங் பெரியசாமியுடன் நடிகர் விஜய் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தத் தகவலை நடிகர் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து  டிரெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT