முகப்பு
செய்திகள்

உங்களில் யார் கோடீஸ்வரன் ?: தொகுத்து வழங்கும் ஜூனியர் என்.டி.ஆர்; தமிழில்?

உங்களில் யார் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சியைத் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கவிருக்கிறார். 

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:58 AM
பகிர்:

உங்களில் யார் கோடீஸ்வரன் என்ற நிகழ்ச்சியைத் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கவிருக்கிறார். 

ஹிந்தியில் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிய 'கோன் பனேகா க்ரோர்பதி' என்ற நிகழ்ச்சியை முதன் முதலில்  தமிழில் நடிகர் சரத்குமார் 'கோடீஸ்வரன்' என்ற பெயரில் தொகுத்து வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் நடிகர் சூர்யா ' நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' என்ற பெயரில் தொகுத்து வழங்கினார். அதே நிகழ்ச்சியை அதற்கடுத்தாண்டு அரவிந்த் சாமி தொகுத்து வழங்கினார். பின்பு நடிகை ராதிகா கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 'கோடீஸ்வரி' என்ற பெயரில் தொகுத்து வழங்கினார். 

இந்த நிகழ்ச்ச தமிழைப் போலவே தெலுங்கு, மலையாளம், மொழிகளிலும் ஒளிபரப்பானது. இந்த நிலையில் தெலுங்கில் மீண்டும் 'உங்களில் யார் கோடீஸ்வரன்' என்ற பெயரில் இந்த நிகழ்ச்சியை தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் தொகுத்து வழங்கவிருக்கிறார். இந்த நிகழ்ச்சி ஜெமினி டிவியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. 

முதல் நிகழ்ச்சியில் ராம் சரண் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவிருக்கிறார். ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரண் இணைந்து 'ஆர்.ஆர்.ஆர்' படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவிருக்கிறது. 

ஜெமினி டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாவதால், சன் டிவியிலும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தமிழில் ஒளிபரப்பானால் பிரபல நடிகர் அதனை தொகுத்து வழங்குவார். அது யார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →