முகப்பு
செய்திகள்

திரெளபதி இயக்குநரின் அடுத்த பட டிரெய்லர்: புதிய தகவல்

திரெளபதி படத்தின் டிரெய்லர் சமூகவலைத்தளங்களில் பல விவாதங்களை உருவாக்கியது.

Updated On : 23 ஆகஸ்ட், 2021 at 1:22 PM
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:28 AM


ரிஷி ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ் நடிப்பில் மோகன் ஜி. இயக்கிய திரெளபதி படம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. நாடக்காதலை மையமாகக் கொண்ட இந்தப் படம் சமூகவலைத்தளங்களில் அதிகமாக விவாதிக்கப்பட்டது.

மோகன் ஜி.-யின் அடுத்த படத்தில் பிரபல இயக்குநர் கெளதம் மேனன் நடிக்கிறார். ரிச்சர்ட், கெளதம் மேனன், தர்ஷா குப்தா நடிப்பில் உருவாகியுள்ள ருத்ர தாண்டவம் என்கிற படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5.06 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திரெளபதி படத்தின் டிரெய்லர் சமூகவலைத்தளங்களில் பல விவாதங்களை உருவாக்கியது. அதேபோல ருத்ர தாண்டவம் படத்தின் டிரெய்லரும் சமூகவலைத்தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது நாளை தெரியவரும். 

தணிக்கையில் யு/ஏ பெற்றுள்ள ருத்ர தாண்டவம் படம் திரையரங்குகளில் விரைவில் வெளிவரவுள்ளது. திரையரங்குகளில் வெளியிட பொங்கல் வரைக்கும் கூட காத்திருப்போம் என இயக்குநர் சமீபத்தில் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.