மகனுக்காக மனைவியை மீண்டும் திருமணம் செய்த நடிகர் பிரகாஷ் ராஜ் (புகைப்படங்கள்)
தன் மகனுக்காக மனைவி போனி வர்மாவை மீண்டும் திருமணம் செய்ததாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
தன் மகனுக்காக மனைவி போனி வர்மாவை மீண்டும் திருமணம் செய்ததாக நடிகர் பிரகாஷ் ராஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக கலைஞனாக சினிமாவில் இயங்கி வருபவர் பிரகாஷ் ராஜ். வில்லன் கதாப்பாத்திரம் ஆனாலும் சரி, குணச்சித்திர வேடமானாலும் சரி, மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.
இதையும் படிக்க | நிஜத்திலும் மாறுவேடமா ? : நடிகர் ஆர்யா வழக்கில் திடீர் திருப்பம்
இவர் தற்போது ரஜினிகாந்த்துடன் இணைந்து 'அண்ணாத்த', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', தனுஷுடன் இணைந்து 'மாறன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் படப்பிடிப்பில் ஏற்பட்ட சிறிய விபத்தில் நடிகர் பிரகாஷ் ராஜிற்கு கையில் காயம் ஏற்பட்டு அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு 'பொன்னியின் செல்வன்' படப்படிப்பில் கலந்துகொண்டார். அப்போது கார்த்தி, மணிரத்னம் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சுட்டுரைப் பக்கத்தில் பகிர அது வைரலானது.
இதையும் படிக்க | ருத்ர தாண்டவம் ஆட வருகிறார் திரௌபதி இயக்குநர்
நடிகர் பிரகாஷ் ராஜ் நடன இயக்குநர் போனி வர்மா என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு இரண்டாவதாக திருமணம் செய்தார். இருவருக்கும் வேதாந்த் என்ற மகன் உள்ளார்.
இந்த நிலையில் தனது சுட்டுரைப் பக்கத்தில் மகள்கள், மகன் ஆகியோர் முன்னிலையில் தனது மனைவி போனி வர்மாவுக்கு மோதிரம் அணியும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ''என் மகன் வேதாந்த் கேட்டுக்கொண்டதற்காக நானும், போனி வர்மாவும் மீண்டும் திருமணம் செய்தோம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.