முகப்பு
செய்திகள்

தெலுங்கு படத்துக்காக ஷங்கருடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்

ராம் சரண் படத்துக்காக இயக்குநர் ஷங்கருடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் பணியாற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

ராம் சரண் படத்துக்காக இயக்குநர் ஷங்கருடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் பணியாற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர் பிரச்னை காரணமாக 'இந்தியன் 2' படம் பாதியில் நிற்பதால் இயக்குநர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம் சரண் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடிக்கிறார். 

தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஷங்கர் இயக்கிய 'பாய்ஸ்' படத்தில் தான் தமன் முதன்முதலாக நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார்.

இந்த நிலையில் இந்தப் படத்தில் புதிதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் ஷங்கருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்தப் படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஷங்கருடன் இணைந்து எழுதவுள்ளாராம்.

முழு கட்டுரையைப் படிக்க →