முகப்பு
செய்திகள்

''இனி சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பார்க்கணும் போல'' - சூரியின் புகைப்படத்துக்கு சிவகார்த்திகேயன் கருத்து

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் நடிகர் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:00 AM
பகிர்:

நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கம் மூலம் நடிகர் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் பின்னணியில் நடிக்கும் படங்களில் நிச்சயம் சூரி இருப்பார். அந்த அளவுக்கு இருவரது கூட்டணி இணைந்து விட்டால் அங்கு நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. 

'மனம் கொத்திப் பறவை', 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'கேடி பில்லா கில்லாடி ரங்கா', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'நம்ம வீட்டுப் பிள்ளை' என வரிசையாக இருவரும் இணைந்து நடித்த படங்கள் அனைத்திலும் ரசிகர்களின் சிரிப்பு சத்தத்தால் திரையரங்குகள் அதிரும்.

Advertisement

தற்போது வெற்றி மாறன் இயக்கத்தில் 'விடுதலை' என்ற படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகர் சூரி தனது பிறந்த நாளை முன்னிட்டு 6 பேக்ஸ் உடற்கட்டுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் விடியோவை பகிர்ந்துள்ளார். 

இதற்கு கருத்து தெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், ''எதிர் நீச்சல் அடி என்று ஏற்றுக் கொடி.... ஆள் செமயா இருக்கீங்க. இனிமே ஃபுல்லா ஹீரோ தான். நாங்க சங்கத்துக்கு வேற செயலாளர் தான் பாக்கனும் போல. என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments