முகப்பு
செய்திகள்

மொட்டைத் தலை... மிரட்டலான பார்வை...: கொடூரமான வில்லனாக ஃபகத் - வெளியான போஸ்டர்

அல்லு அர்ஜூன் வில்லனாக நடிக்கும் 'புஷ்பா' படத்திலிருந்து, ஃபகத் ஃபாசிலின் தோற்றம் மற்றும் வேடம் ஆகியவை அடங்கிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

அல்லு அர்ஜூன் வில்லனாக நடிக்கும் 'புஷ்பா' படத்திலிருந்து, ஃபகத் ஃபாசிலின் தோற்றம் மற்றும் வேடம் ஆகியவை அடங்கிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

தான் ஏற்கும் வித்தியாசமான வேடங்கள் மூலம் மொழிகள் கடந்து ரசிகர்களைப் பெற்றவர் ஃபகத் ஃபாசில். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் அவருக்கென ரசிகர்கள் உண்டு. 

'பூவிழி வாசலிலே', 'வருஷம்16', 'காதலுக்கு மரியாதை' போன்ற தமிழ் படங்களை இயக்கிய மலையாள இயக்குநரான ஃபாசிலின் மகன் தான் இந்த ஃபகத். தமிழ் ரசிகர்களின் இதயம் கவர்ந்த நஸ்ரியாவின் கணவர்.

தமிழில் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்' படத்தில் வில்லனாகவும், தியாகராஜன் குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸில் குணச்சித்திர வேடத்திலும் கலக்கியிருப்பார்.

தற்போது ஃபகத் தமிழில் கமல்ஹாசனுடன் இணைந்து 'விக்ரம்' படத்திலும், தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் இணைந்து 'புஷ்பா' படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் 'புஷ்பா' படத்தில் அவரது தோற்றம், கதாப்பாத்திரத்தை அறிவிக்கும் போஸ்டர் வெளியாகியுள்ளது. 

'புஷ்பா' படத்தில் பன்வார் சிங் ஷேக்வாட் என்ற ஐபிஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். மொட்டைத் தலையோடு அவர் இருக்கும் பார்த்தாலே அவர் மிகக் கொடூரமான வில்லனாக இருப்பார் என தெரிகிறது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

முழு கட்டுரையைப் படிக்க →