முகப்பு
செய்திகள்

நகைச்சுவைத் திறமை உள்ளவரா நீங்கள்?: பா. இரஞ்சித் வழங்கும் வாய்ப்பு

5 நிமிட ஸ்டாண்ட் அப் காமெடி விடியோ ஒன்றையும் உங்கள் விவரங்களையும்...

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:


இயக்குநர் பா. இரஞ்சித், நீலம் சோசியல் என்கிற யூடியூப் சேனலை நிர்வகித்து வருகிறார். இந்த சேனலின் சமூகவலைத்தளங்களில் இன்று புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நீலம் சோசியல் யூடியூப் சேனலின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சிக்கு நகைச்சுவைக் கலைஞர்கள் தேவை.

தமிழகத்தில் உள்ள வளர்ந்து வரும் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம். விலைவாசி உயர்வு, சாதியம், மதவாதம், முதலாளித்துவம் போன்ற சமகால சமூக அரசியல் குறித்து எழுதி பெர்ஃபார்ம் செய்யும் திறனும் ஆர்வமும் இருக்கவேண்டும். 5 நிமிட ஸ்டாண்ட் அப் காமெடி விடியோ ஒன்றையும் உங்கள் விவரங்களையும் neelamsocialmedia@gmail.com மின்னஞ்சலுக்கு அனுப்பவும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு நீலம் சோசியல் வெளியிட்டுள்ள இந்தப் பதிவில் காணலாம். 

முழு கட்டுரையைப் படிக்க →