நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் கரோனாவினால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து அவர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சில வாரங்களுக்கு ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்து வந்த விக்ரம் திரைப்படம் பாதியில் நிற்கிறது.
இதையும் படிக்க | ''தலனு சொல்லாதிங்க'' : ரசிகர்களுக்கு நடிகர் அஜித் வேண்டுகோள்
இந்த நிலையில் மருத்துவமனை தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், ''நடிகர் கமல்ஹாசன் கரோனாவில் இருந்து முழுவதுமாக குணமடைந்துவிட்டார். மேலும் வரும் 3 ஆம் தேதி வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பார். பின்னர் அவர் வழக்கமான பணிகளுக்கு திரும்புவார்'' என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.