செய்திகள்

'மாநகரம்' ஹிந்தி ரீமேக்: டப்பிங் பணிகளை நிறைவு செய்த விஜய் சேதுபதி

மாநகரம் ஹிந்தி ரீமேக்கான மும்பைகர் படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி நிறைவு செய்துள்ளார். 

DIN

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான 'மாநகரம்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்தப் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காகிறது. ஹிந்தியில் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் இயக்கியுள்ளார். 'மும்பைகர்' என்று பெயிரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் விக்ராந்த் மாஸ்ஸே, ஹிர்து ஹாரூன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இந்தப் படத்தில் தமிழில் முனிஷ்காந்த் நடித்த வேடத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இந்தப் படத்தின் டப்பிங் பணிகளை விஜய் சேதுபதி இன்று நிறைவு செய்துள்ளார். இதனையடுத்து விஜய் சேதுபதியுடன்  எடுத்துக்கொண்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. 

மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் மற்றும் ஃபகத் ஃபாசிலுடன் இணைந்து 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஃபேமிலிமேன் இயக்குநர்களின் புதிய இணையத் தொடரிலும் நடித்து வருகிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆசிய கோப்பையில் வரலாறு படைத்த இலங்கை வீரர்!

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... இந்திய ரிசர்வ் வங்கியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் ஆயுத உற்பத்திக்கூடம் அழிப்பு!

தாயின் கண்முன்னே 5 வயது மகனின் தலை துண்டித்துக் கொலை! மனநலம் பாதித்தவர் வெறிச்செயல்!

மும்பை -அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் முழுமையாக திறக்கப்படும்: அஸ்வினி வைஷ்ணவ்

SCROLL FOR NEXT