முகப்பு
செய்திகள்

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படக் கதை இதுதான்: வெளியான தகவல்

விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

ஆர்யாவுடன் இணைந்து விஷால் நடித்திருந்த எனிமி திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு கடந்த நவம்பர் 4 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ரசிகர்களையும் இந்தப் படம் கவரவில்லை. 

இதனையடுத்து விஷால் நடித்திருக்கும் படம் வீரமே வாகை சூடும். இந்தப் படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹைத்தி நடிக்க, யோகி பாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்தை து.ப.சரவணன் இயக்கியுள்ளார். தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்தப் படத்தை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இந்தப் படம் அதிகாரம் பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதை என்று கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.