செய்திகள்

'யசோதா'வாக களமிறங்கும் சமந்தா : ஐந்துமொழிகளில் உருவாகும் படம் பற்றிய அறிவிப்பு

சமந்தா நடிக்கும் யசோதா படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. 

DIN

சமந்தா முதன்மை வேடத்தில் நடிக்கும் யசோதா படத்தின் படப்பிடிப்பு இன்று (டிசம்பர் 6) துவங்கியது. இந்தப் படத்துக்கு மணிசர்மா இசையமைக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தப் படத்தை ஹரி மற்றும் ஹரிஷ் இயக்குகின்றனர். இந்தப் படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகிறது. 

இதுமட்டுமல்லாமல் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் சமந்தா நடிக்கவிருக்கிறார். மேலும், அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு சமந்தா நடனமாடியிருக்கிறார். புஷ்பா திரைப்படம் வருகிற பொங்கலை முன்னிட்டு திரைக்குவரவிருக்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

தென்னாப்பிரிக்காவின் துரந்தர் யார்? பயிற்சியாளர் பிரசன்னா கிளப்பிய புதிய சர்ச்சை!

பாதயாத்ராவில் மம்மூட்டி தோற்றம்!

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழி

SCROLL FOR NEXT