செய்திகள்

மீண்டும் 'துப்பறிவாளன் 2' - விஷால் பகிர்ந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சி

DIN

துப்பறிவாளன் படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு விஷால் - இயக்குநர் மிஷ்கின் இணைந்த படம் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்தது. இந்தப் படத்தில் பிரசன்னா முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். 

இந்த நிலையில் விஷால் - மிஷ்கின் இடையே உருவான பிரச்னையின் காரணமாக இந்தப் படம் பாதியில் நின்றது. இந்தப் படத்தை தானே இயக்கப்போவதாக விஷால் அறிவித்தார். இயக்குநர் மிஷ்கினும், விஷாலும் மேடைகளில் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி பேசிய விடியோ இணையதளங்களில் வெளியானது. ஆனால் அதன் பிறகு துப்பறிவாளன் 2 படம் குறித்து எந்த தகவலும் இல்லை. 

இந்த நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் லண்டனில் துவங்கவிருப்பதாகவும், ஏப்ரல் மாதம் படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் வயா் திருட்டு: ஒருவா் கைது

வேன் மீது லாரி மோதல்: 4 போ் காயம்

தெய்வத்தமிழ் பேரவையினா், நாம் தமிழா் கட்சியினா் கைது

உதவி ஆய்வாளா் உடலுக்கு அரசு மரியாதை

உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

SCROLL FOR NEXT