'டாக்டர்' படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'டான்'. சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மற்றும் லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
'டாக்டர்' படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பால சரவணன், ஆர்ஜே விஜய், சிவாங்கி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | பிரபல நடிகர் எடுத்த தனது புகைப்படத்தை பகிர்ந்த நஸ்ரியா
கல்லூரி பின்னணியில் இந்தப் படம் உருவாகியுள்ளது. சில காட்சிகளில் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனும், பிரியங்கா மோகனும் பள்ளி மாணவர்களாகவும் நடித்துள்ளனராம்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் இருந்து ஜலபுலஜங்கு என்ற பாடலின் ப்ரமோ நேற்று (16/12/2021) வெளியானது. இந்த நிலையில் முழு பாடலும் தற்போது வெளியாகியுள்ளது. ரோகேஷ் எழுதியுள்ள இந்தப் பாடலை அனிருத் பாடியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.