5 மொழிகளில் தயாராகும் நடிகர் விஷால் படம் : இயக்குநர் யார் தெரியுமா?
பிரபல இயக்குநருடன் விஷால் இணையும் படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனிமி படத்துக்குப் பிறகு விஷால் நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும். இந்தப் படத்தை து.பா.சரவணன் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தை விஷால் தனது விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக தயாரித்துள்ளார். இந்தப் படம் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தில் டிம்பிள் ஹயாதி, யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க | புதிய படத்துக்காக மீண்டும் இணையும் ரஜினிகாந்த் - இளையராஜா ?
Advertisement
இந்தப் படத்தையடுத்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் விஷால் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை எனிமி படத் தயாரிப்பாளர் வினோத் குமார் தயாரிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு வருகிற ஜனவரி மாதம் துவங்கி ஏப்ரல் மாதம் நிறைவைடையும் என விஷால் தெரிவித்திருந்தார்.