செய்திகள்

விஜய் பட இயக்குநர் மரணம்

இயக்குநர் ஆச்சார்யா ரவி உடல் நலக் குறைவால் காலமானார். 

DIN

திரைப்பட இயக்குநா் ‘ஆச்சாா்யா’ ரவி (54) மாரடைப்பு காரணமாக மதுரையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

மதுரையை பூா்விகமாகக் கொண்ட ரவி, திரைப்பட இயக்குநா் லியாகத் அலிகானிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவா். பின்பு, இயக்குநா் பாலாவிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்தாா். பாலா இயக்கிய ‘சேது’ படம் தொடங்கி அவரின் பல படங்களுக்கு துணை நின்றவா் ‘ஆச்சாா்யா’ ரவி. இவா், ‘ஆச்சாா்யா’ எனும் படத்தை இயக்கியதன் மூலம் ‘ஆச்சாா்யா’ ரவி என்று அழைக்கப்பட்டாா். இவா் இயக்கிய ‘ என்னதான் பேசுவதோ’ படம் இன்னும் திரைக்கு வரவில்லை.

உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இயக்குநா் ரவி செவ்வாய்க்கிழமை காலமானாா்.

அவரது உடல் மதுரை கருப்பாயூரணி பகுதியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு மனைவி, மகள் உள்ளனா். அவரது இறுதிச் சடங்குகள் புதன்கிழமை நடைபெறுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாஜகவின் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜேன் ஏஜேபி கட்சியில் இணைந்தார்!

வேல் இருந்தால், ஒளியுண்டு... சாக்‌ஷி அகர்வால்!

பொதுவெளியில் மெக்சிகோ அதிபரிடம் அத்துமீறிய நபர்! என்ன நடந்தது?

சின்ன மருமகள் தொடரில் மின்னலே நாயகன்!

கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து திமுகவிற்கு ஆதரவு கொடுத்தாரே விஜய்! - Aadhav Arjuna

SCROLL FOR NEXT