1991-ல் வெளியான என் ராசாவின் மனசிலே படம் பெரிய அளவில் வெற்றி பெற்று ராஜ்கிரணை கதாநாயகனாக மாற்றியது.
கஸ்தூரி ராஜா இயக்கிய இந்தப் படம் இளையராஜாவின் பாடல்களாலும் உணர்வுபூர்வமான காட்சிகளாலும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றது.
என் ராசாவின் மனசிலே படத்தின் அடுத்த பாகம் உருவாகவுள்ளது.
ராஜ்கிரணின் மகன் திப்பு சுல்தான் நைனார் முஹம்மது, என் ராசாவின் மனசிலே 2 படத்தை இயக்கவுள்ளார்.
இதுகுறித்து ஃபேஸ்புக்கில் ராஜ்கிரண் எழுதியதாவது:
இன்று, என் மகனார் திப்பு சுல்தான் நைனார் முஹம்மதுவின் இருபதாவது பிறந்த நாள்.
என் ராசாவின் மனசிலே இரண்டாம் பாகத்துக்கான கதையை எழுதி முடித்துவிட்டு, திரைக்கதையை எழுதிக்கொண்டிருக்கிறார். அவரே படத்தை இயக்கவும் உள்ளார்.
அவர் மிகப்பெரும் வெற்றிப்பட இயக்குநராக, உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளையும், வாழ்த்துகளையும் வேண்டுகிறேன் என்று எழுதியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.