முகப்பு
செய்திகள்

நான்கு வருடங்களுக்குப் பிறகு வெளியாகும் இயக்குநர் நலன் குமாரசாமியின் படம்

விஜய் சேதுபதி, அமலா பால், மேகா ஆகாஷ், அதிதி பாலன், வருண் போன்றோர் நடித்துள்ளார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

பிரபல நடிகர்கள், பிரபல இயக்குநர்கள் பங்களிப்பில் உருவாகியுள்ள குட்டி ஸ்டோரி படம் பிப்ரவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

கெளதம் மேனன், விஜய், வெங்கட் பிரபு, நலன் குமாரசாமி ஆகியோர் தனித்தனிக் கதைகளுடன் குட்டி ஸ்டோரி என்கிற படத்தை இயக்கியுள்ளார்கள். இப்படத்தில் விஜய் சேதுபதி, அமலா பால், மேகா ஆகாஷ், அதிதி பாலன், சாக்‌ஷி அகர்வால், வருண் போன்றோர் நடித்துள்ளார்கள். சமீபகாலமாக, பல கதைகள் கொண்ட படங்கள் ஓடிடியில் தான் நேரடியாக வெளியாகின்றன. ஆனால் இப்படம் திரையரங்குகளில் முதலில் வெளியாகிறது. குட்டி ஸ்டோரியை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். 

2013-ல் சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார் நலன் குமாரசாமி. படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனால் இவருடைய படங்கள் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன்பிறகு விஜய் சேதுபதி, மடோனா நடித்த காதலும் கடந்து போகும், 2016-ல் வெளியானது. படம் ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தாலும் சூது கவ்வும் அளவுக்குப் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் கடந்த நான்கு வருடங்களாக நலன் குமாரசாமி எந்தப் படத்தையும் இயக்கவில்லை.

இந்நிலையில் குட்டி ஸ்டோரியில் ஒரு பகுதியை நலன் குமாரசாமி இயக்கியுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம் இது. இதையடுத்து நலன் குமாரசாமி அடுத்து இயக்கும் படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.