சிம்பு நடிக்கும் மாநாடு: டீசர் வெளியீடு!
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ்...
சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கியது.
சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், பாரதிராஜாவின் மகன் மனோஜ், பிக் பாஸ் டேனியல், ஒய்.ஜி. மகேந்திரன் போன்றோர் நடிக்கிறார்கள். இசை - யுவன் சங்கர் ராஜா, ஒளிப்பதிவு - ரிச்சர்ட் எம். நாதன். இப்படத்தில் முதல்முறையாக இஸ்லாமிய இளைஞராக, அப்துல் காலிக் என்கிற வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. கரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
திரைப்படப் படப்பிடிப்பை தொடங்க அரசு அனுமதித்த பிறகு, சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்கிற படத்தில் நடித்தார் சிம்பு. அடுத்ததாக மாநாடு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார்.
இந்நிலையில் சிம்புவின் பிறந்த நாளான இன்று, மாநாடு படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.