செய்திகள்

பிப். 14 முதல் மலையாள பிக் பாஸ் தொடக்கம்!

மோகன் லால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

DIN

பிப்ரவரி 14 முதல் மலையாள பிக் பாஸ் தொடங்கடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக தாமதமாகத் தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், இந்த முறையும் தொகுத்து வழங்கினார். நடிகர் ஆரி பிக் பாஸ் பட்டத்தை வென்றார். 

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே பரவலான வரவேற்பு உண்டு. தொலைத் தொடர்பு, இணையம், தொலைக்காட்சி என எந்தத் தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லாமல் 100 நாள்கள் இருப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் போட்டி விதி. 

இந்நிலையில் மலையாள பிக் பாஸ் 3-ம் பருவத்தின் நிகழ்ச்சி வரும் பிப்ரவரி 14 முதல் தொடங்கவுள்ளது. இந்தமுறையும் மோகன் லால் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது. இதற்காக சென்னை ஏவிபி ஃபிலிம் சிட்டியில் பிக் பாஸ் இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணி தொடங்கியது! தேவையான ஆவணங்கள் என்ன?

இரட்டை இலை விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு செங்கோட்டையன் கடிதம்!

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

சுங்கச் சாவடி கட்டண விவகாரம்: போக்குவரத்துக் கழக அதிகாரி பதிலளிக்க உத்தரவு

பிகார் முதல் கட்டத் தேர்தல்! இன்றுடன் பிரசாரம் ஓய்வு!

SCROLL FOR NEXT