செய்திகள்

ஹெலன் தமிழ் ரீமேக்: மார்ச் 5-ல் திரையரங்குகளில் வெளியாகும் அன்பிற்கினியாள் படம்!

அன்னா பென் வேடத்தில் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார்.

DIN

ஜுங்கா படத்தை இயக்கிய கோகுல் அடுத்ததாக ஹெலன் என்கிற மலையாளப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்துள்ளார். 

2019-ல் வெளியான ஹெலன் மலையாளப் படத்தை மாதுகுட்டி சேவியர் இயக்கியிருந்தார். அன்னா பென், லால் நடித்த இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம் தற்போது தமிழில் ரீமேக் ஆகியுள்ளது.

ஹெலன் தமிழ் ரீமேக்குக்கு அன்பிற்கினியாள் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. அன்னா பென் வேடத்தில் நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். அருண் பாண்டியன் தயாரித்து நடித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - மகேஷ் முத்துசாமி, இசை - ஜாவித் ரியாஸ். 

இந்நிலையில் அன்பிற்கினியாள் படம் மார்ச் 5-ல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாருதி சுஸுகி விற்பனை 3% உயா்வு

இந்தியாவின் மிகப் பெரிய சா்க்கரை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான இஐடி பாரி வருவாய் 29% உயா்வு

பெரம்பலூா் அருகே வெறிநாய்கள் கடித்து கன்றுக்குட்டி, 4 ஆடுகள் உயிரிழப்பு

ஐடி பங்குகள் அதிகம் விற்பனை: சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன தாழ்தள சொகுசுப் பேருந்துகள்! அடுத்த வாரத்தில் இயக்க ஏற்பாடு

SCROLL FOR NEXT