படம் - twitter.com/manojdft 
செய்திகள்

விஜய் 65: உறுதி செய்தார் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார்...

DIN

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய்யின் 65-வது படத்தை நெல்சன் இயக்குகிறார். இதற்கான அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. 

ரஜினி நடிப்பில் சிவா இயக்கும் அண்ணாத்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது.  நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் அடுத்ததாக, சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தை இயக்கியுள்ளார்.

விஜய் - சன் பிக்சர்ஸ் - நெல்சன் கூட்டணி புதிதாக உருவாகியுள்ளதால் இதுகுறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார்.

இந்நிலையில் தளபதி 65 எனத் தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இதுகுறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் மனோஜ் பரமஹம்சா. அவர் கூறியதாவது:

மாநிலத்தில் அனைவராலும் விரைவில் நாடு முழுக்கவும் விரும்பப்படும் அற்புதமான மனிதருடன் மீண்டும் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நண்பன் படத்துக்குப் பிறகு மீண்டும் இணைந்து பணியாற்றுவதில் ஆர்வமாக உள்ளேன். அந்த  நினைவுகளை நினைத்துப் பார்க்கிறேன். தளபதி 65 இந்திய அளவிலான படமாக இருக்கும். தயாராக இருங்கள் என்று கூறியுள்ளார். 

ஈரம், விண்ணைத் தாண்டி வருவாயா, நண்பன் போன்ற படங்களுக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மடாலயங்களில் படப்பிடிப்பு

எல்டிஐமைண்ட்ட்ரீ 3வது காலாண்டு நிகர லாபம் 10.5% சரிவு!

நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு இந்தியா: இஸ்ரோ தலைவர் பெருமிதம்

அமெரிக்காவில் பனிப்புயலால் கடும் பாதிப்பு: ஒரேநாளில் 10,000 விமானங்கள் ரத்து!

கலைத்துறையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜா ஸ்தபதி!

SCROLL FOR NEXT